தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வரும் பிரபுதேவா சமீபத்தில் பிரபல இயக்குநர் சுதா கொங்கராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இயக்குநர் சுதா கொங்கரா, ‘இருதிசுற்று’ மற்றும் ‘சூரரைப் போற்று’ போன்ற தரமான திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்திலும் பிரபுதேவாவின் நடிப்பிலும் ஒரு படம் உருவாகுமா என்ற கேள்வி தற்பொழுது ரசிகர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
முன்னதாக, சுதா கொங்கரா, நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பிரபுதேவாவுடன் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது சுதா கொங்கராவுடன் சேர்ந்து பிரபுதேவா எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் "இந்த கூட்டணி நடந்தால் அது தமிழ் சினிமாவிற்குப் புதிய ஆச்சரியம் தந்துவிடும்" எனக் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர், “சுதா கொங்கராவின் கதை சொல்லும் திறன் மற்றும் பிரபுதேவாவின் தனித்துவமான நடிப்பு இணைந்தால், ஒரு மாஸ்டர் பீஸ் தயாராகலாம்” எனவும் கூறி வருகின்றனர்.
Listen News!