பிக்பாஸ் சீசன் 9 தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், வீட்டுக்குள் நடந்துவரும் சண்டை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளன. அதற்கிடையில், இந்த சீசனிலிருந்து வெளியேறிய போட்டியாளர் திவாகர் தனது சமீபத்திய நேர்காணலில் வெளிப்படையாக கூறிய கருத்துகள் தற்போது இணையத்தை சூடாக்கி வருகின்றன.

“வாட்டர் மெலன் ஸ்டார்” என ரசிகர்கள் அழைக்கும் திவாகர், வீட்டில் இருந்த நாட்களில் தனது ஸ்டைல், நகைச்சுவை மற்றும் நேரடியான பதில்கள் ஆகியவற்றால் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய பிறகு, அளித்த பேட்டியில் பகிர்ந்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றது.
நேர்காணலில் பேசிய போது திவாகர், இந்த சீசனின் போட்டியாளர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளித்திருந்தார்.

அவர் அதன்போது, “இந்த முறை விளையாடுகின்ற போட்டியாளர்கள் எல்லாருமே கொஞ்சம் சுமாரா தான் இருக்கிறார்கள். எந்தவொரு பெர்ஃபாமன்ஸும் சூப்பரா இல்லை. பழைய பிக்பாஸில் அர்ச்சனாவை பார்த்திருக்கேன் ரொம்ப மெச்சூரிட்டியா இருப்பாங்க.
அதே மாதிரி ஆரியனும் ரொம்ப நேர்மையா விளையாடினார். ஆனால் இந்த முறை விளையாடுற போட்டியாளர்கள் யாருமே அப்படி இல்லை." என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!