• Nov 23 2025

விஜய்க்கு அரசியல் அறிவு ஜீரோ.. ஜெயமணி சொன்னது உண்மை தானா.? முழுவிபரம் இதோ.!

subiththira / 6 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அவரது நடிப்புத் திறன் மற்றும் ரசிகர்களிடையேயான பிரபலத்தால் மட்டுமல்ல, சமீபத்திய காலங்களில் அவரது அரசியல் முயற்சிகளால் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றார். இதனால், அவரின் அரசியல் ஆர்வம் மற்றும் வழிகாட்டல் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.


சமீபத்திய நேர்காணலில், நடிகர் ஜெயமணி விஜயை பற்றிய தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

ஜெயமணி அதன்போது, “விஜய் கூட நான் சில படங்களில் நடித்திருக்கேன். எனக்கு அவரைப் பற்றி நல்லா தெரியும். சிவகாசி பட சமயத்திலயே அவருக்கு அரசியல் ஆசை இருந்திச்சு. ஆனா, அரசியல் அறிவு ஜீரோ. இப்ப எப்படின்னு தெரியல. எழுதி கொடுத்தத நிறைய பேசிட்டு இருக்கார்.


அவர் வெற்றி பெறணும்னு ஆசை தான். ஆனா, அவரை யாரோ தப்பா வழி நடத்துறாங்க... கோடி கணக்கில சம்பாதிச்சு வைச்சிருக்கார். குடும்பம், புள்ள குட்டின்னு சுபிக்ஷமா வாழாம அரசியலுக்கு எதுக்கு வந்தாருன்னு தெரியல.” எனக் கூறியுள்ளார். 

இந்த கருத்து, விஜயின் அரசியல் பயணத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயமணிக்கு விஜயுடன் சில படங்களில் இணைந்து நடித்த அனுபவம் உள்ளது. குறிப்பாக, சிவகாசி படத்தின் போது, அவர்களது கூட்டணி சிறப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement