நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடித்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “மாஸ்க்” திரைப்படம் நேற்று (நவம்பர் 21, 2025) உலகமெங்கும் வெளியானது. வெளியானது முதல் இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதுடன், படம் குறித்தவொரு விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அதற்கு படக்குழு தெளிவான விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

‘மாஸ்க்’ படத்தின் இசையில் இளையராஜாவின் சில பிரபலமான பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் சில ஊடகங்களில் எழுந்தது. அதற்கு இன்று படக்குழு நேரடியாக பதில் வழங்கியுள்ளது.
படக்குழு அதன்போது, “இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியும் ஆசிர்வாதமும் வாங்கித் தான் மாஸ்க் திரைப்படத்தில் அவரது பாடல்களைப் பயன்படுத்தினோம்.” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் திரைப்படம் வெளியீட்டின் முதல் நாளில் ரசிகர்களை கவர்ந்த அம்சங்களில் ஒன்று இளையராஜாவின் இசை. பழைய பாடல்கள் புதுப்பிக்கப்பட்ட ஒலித் தரத்துடன் மற்றும் கதையின் நுணுக்கத்துக்கேற்ப சேர்க்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் இப்படத்தினை அதிகமாக பாராட்டி வருகின்றனர்.
Listen News!