தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் காணப்படுகின்றார். இவர் டாடா, கிஸ் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ப்ளடி பெக்கர், ஸ்டார் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .
இதை தொடர்ந்து விகர்ணன் இயக்கத்தில் கவின் நடித்த படம் தான் மாஸ்க். இந்த படத்தை வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த படத்தின் ட்ரெய்லரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுவரை நடிகையாகவும் பாடகியாகவும் காணப்பட்ட ஆண்ட்ரியா, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தனது வீட்டை அடமானம் வைத்து தான் எடுத்ததாகவும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கவின் அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் மாஸ்க் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மாஸ்க் படம் வெளியான நிலையில் படத்திற்கு பாசிட்டிவ் வாசனங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் எந்தவித சொதப்பலும் இல்லாமல் க்ரைம் காமெடி ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படத்தின் மூலம் ஆண்ட்ரியாவுக்கு தயாரிப்பாளராக நல்ல தொடக்கம் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் 68 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் மட்டும் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
முதல் நாள் வசூல் குறைவாக காணப்பட்டாலும் தற்போது இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் மேலும் வசூல் அதிகரிக்க கூடும் என நம்பப்படுகிறது.
Listen News!