உலகளாவிய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பான்–இந்திய திரைப்படம் “SPIRIT” குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், Animal போன்ற படங்களின் மூலம் திரையுலகில் தனித்துவமான முத்திரையைப் பதித்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இந்த முறை இந்திய சினிமாவின் டார்லிங் பிரபாஸுடன் இணைந்து உருவாக்கும் மிகப்பெரிய படைப்பாக “SPIRIT” உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மிகப்பெரிய திட்டத்தின் முதல் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவர் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஒரு செம ஹைப்பை உருவாக்கியுள்ளது.
அத்துடன், இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக த்ரிப்தி திம்ரி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “SPIRIT” படத்தின் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே, இது இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!