• Nov 21 2025

‘மாஸ்க்’ படம் எப்படி இருக்கு! கவினின் நடிப்பிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.?

subiththira / 10 minutes ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின், அதன் பிறகு தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகிறார். லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 


ஆனால் சமீபத்தில் வெளியான ‘பிளடி பெக்கர்’ எதிர்பார்த்த அளவுக்கு சாதனையைப் படைக்கவில்லை. இப்படத்திற்குப் பின் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் ‘மாஸ்க்’, இன்று நவம்பர் 21, 2025 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் இன்று வெளியாகி இணையம் முழுவதும் விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கிறது.


மாஸ்க் திரைப்படம் ஒரு மர்ம–த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. கதை அமைப்பு, திரைக்கதை , கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியவை படத்தின் முக்கிய பலமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கவின், மாஸ்க் படத்தில் தனது நடிப்பு திறனுக்கு மேலும் ஒரு உயரத்தை வழங்கியுள்ளார் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, உணர்ச்சி காட்சிகள், பதட்டமும் மர்மமும் கலந்த sequences, நகைச்சுவை மற்றும் action portions இவற்றில் கவின் நன்றாக நடித்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

அத்துடன், பலர் இயக்குநர் விகர்ணன் அசோக்கின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். பெரும்பாலான விமர்சனங்கள் சாதகமாக இருந்தாலும், சிலர் எதிர்மறையான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், முதல்நாள் reviews பார்த்தபோது, மாஸ்க் படம் நிச்சயமாக ரசிகர்கள் ரசிக்கும் படி உள்ளதுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய வகையிலும் காணப்படும் என்பதை அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement