• Nov 23 2025

திரையரங்கில் ஹிட்டான "ஆர்யன்" இப்போது ஓடிடியில்... ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

subiththira / 13 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த மற்றும் நல்ல வரவேற்பை பெற்ற படம் “ஆர்யன்” OTT தளத்தில் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஷ்ரத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், திரையரங்கில் அக்டோபர் 31,2025 அன்று வெளிவந்த பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி, “ஆர்யன்” படம் வரும் 28ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மற்றும் OTT சினிமா விரும்பும்வர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யன் திரைப்படம், திரை உலகில் விசித்திரமான கதை மற்றும் திரில்லர் வகை படமாக வெளிவந்தது. இதன் கதைக்களம், திரைக்கதை, இசை மற்றும் ஒளிப்படம் அனைத்தும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரையரங்கில் வெளிவந்தவுடன், இந்த படம் விமர்சகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. கதை , நடிகர்களின் நடிப்பு மற்றும் அதிரடி திரில்லர் காட்சிகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement