தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் நடிகர் விஷால். இவருக்கு நடிகை சாய் தன்ஷிகாவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
விஷால் தற்போது தன்னுடைய 35 வது படமான மகுடம் படத்தை இயக்கி நடிக்கின்றார். இந்த படத்தில் துஷாரா நாயகியாக நடிக்கின்றார். தற்போது மகுடம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.
நடிகை சாய் தன்ஷிகா நேற்றைய தினம் தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அவருக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் விஷால் பதிவிட்டு இருந்தார்.

அதில் அவர், சாய் தன்ஷிகா தன் வாழ்க்கையில் வந்ததற்கும், எனக்கு ஒரு அர்த்தத்தை கொண்டு வந்ததற்கு நன்றி. எப்போதும் சிரித்துக் கொண்டே உன்னுடைய பாசிடிவிட்டியை பகிர்ந்து கொண்டு இரு. நாம் என்றென்றும் ஒன்றாக இருக்க வழி வகுத்த கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை சாய் தன்ஷிகாவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார் விஷால். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ,
Listen News!