• Nov 22 2025

இனி உங்க சாம்பல கூட பார்க்க முடியாது.! இந்திரஜா சங்கரின் கலங்க வைக்கும் பதிவு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தன்னுடைய காமெடி மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவர் மேடை கலைஞராக அறிமுகமாகி,  நாயகனாக அவதாரம் எடுத்தார். ஆனாலும் அது பூர்த்தியாக முன்பே இறைவனிடம் அர்ப்பணமானார்.

மேடை கலைஞனான ரோபோ சங்கருக்கு விஜய் டிவி சரியான அடித்தளமாக காணப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரோபோ சங்கர்,  இதன் மூலம் தனது வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்தார். அதன்படி காமெடியனாக இருந்து நாளடைவில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இறுதியாக சொட்டச் சொட்ட நனையுது என்ற படத்தில் நடித்திருந்தார். புதிய படப்பிடிப்பின் சூட்டிங்  போது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


எனினும் ரோபோ சங்கரின் குடும்பத்தார் அவர் வெளியூரில் இருக்கின்றார் என்று தம்மை தாமே  ஏமாற்றிக் கொண்டு அவரை நினைவில் வைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவருடைய மனைவியும் சமீபத்தில் அர்ச்சனாவுடன் இணைந்து புதிய நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து இருந்தார்.

இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா,  இதுக்கு அப்புறம் உங்க சாம்பல கூட பார்க்க முடியாது..  உங்க ஆசைப்படி ஃப்ரீ Bird  இருங்க அப்பா.. லாஸ்ட்டா பாய் பாய்.. என்று தனது அப்பாவின் அஸ்தியை கரைத்துள்ளார். இது தொடர்பில் உருக்கமாக இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தற்போது அவருடைய பதிவு பலரையும் கதி கலங்க செய்துள்ளது.


Advertisement

Advertisement