• Nov 22 2025

ஓவியாவின் லேட்டஸ் கிளிக்ஸ்.. கையில என்ன வைச்சு இருக்காங்கனு பாருங்க

Aathira / 7 minutes ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான  களவாணி, மதயானை கூட்டம், கலகலப்பு போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஓவியா. இவருக்கு திரைப்படங்களில் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம்  தனக்கென தனி அடையாளத்தை படைத்தார். 

இதைத்தொடர்ந்து  சமீபத்தில் இடம்பெற்ற கரூர் விவகாரம் தொடர்பில்  நடிகர் விஜய்யை தொடர்ச்சியாக தாக்கி  வந்தார் ஓவியா. இதனால் விஜய்க்கு எதிராக பல போஸ்டர்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும்  கோபத்தை ஏற்படுத்தியது. 


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, தனது புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.  மாடல் உடைகளில்  இவர்  வெளியிடும் புகைப்படங்கள்  ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமையும். 


இந்த நிலையில், நடிகை ஓவியா தற்போது தனது  புதிய புகைப்படங்களை  இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு கையில் சிக்கனும்  மறுகையில் வைன் கிளாஸுடனும் காட்சி  அளிக்கின்றார்.  தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரல் ஆகி வருகின்றன. 

Advertisement

Advertisement