• Dec 17 2025

மம்முட்டி சாதாரண மனிதரா? யாரும் அறிந்திடாத ரகசியங்களை வெளிச்சம் போட்ட ஆர்.கே.செல்வமணி.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மம்முட்டி என்ற பெயர் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திரை உலகில் பன்முகச் சிறப்பும், வசீகரிக்கும் நடிப்பும் கொண்டவர் என்றாலும், அவரைப் பற்றிய உண்மையான மனிதநேயம் மற்றும் குணங்கள் பொதுவாக வெளிப்படாது. சமீபத்தில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது பேட்டியில் மம்முட்டி குறித்து வெளியிட்ட நெகிழ்ச்சி கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.


செல்வமணி குறிப்பிட்டதைப் பார்க்கும் போது, மம்முட்டி ஒரு பெரிய ஸ்டார் என்றாலும்,பணியாளர்கள் மீது அதிக கவனமும் அன்பும் கொண்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

ஆர்.கே. செல்வமணி அதன்போது, " மம்முட்டி சாருக்கு யாரும் shirt எடுத்து போட்டு விட்டால் பிடிக்காது. அவருக்கு அவரே shirt எடுத்துப் போட்டுக்கிடுவாரு... மேக்- அப் மேனுக்கு, அசிஸ்டென்டுக்கு அவரே சம்பளம் கொடுப்பாரு. அவரே கார் எடுத்திட்டு வந்து அதுக்கு டீசல் போட்டுப்பாரு. அவருக்கு ஒரு பிளாக் டீ கொடுத்தால் போதும். சம்பளமே அவருக்கு படம் முடிந்த பிறகு தான் கொடுத்தோம்." எனக் கூறியுள்ளார். 


இதன் மூலம், மம்முட்டி ஒரு பெரிய ஸ்டார் என்றாலும், அவர் ஒரு சிறந்த மனிதன் என்பது வெளிப்படுகிறது. மம்முட்டி திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ளார். இவரது பல திரைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளன. ஆனால், அவரது பின்னணி வாழ்க்கை மற்றும் குணங்கள் பொதுவாக வெளியாகவில்லை. ஆனால், ஆர்.கே. செல்வமணியின் பேட்டி மூலம் மம்முட்டியின் நற்பண்பினை அறிந்து கொள்ளமுடிகிறது.

Advertisement

Advertisement