• Nov 22 2025

சினிமாவையும் விவசாயத்தையும் சமநிலைபடுத்திய ஜெயராம்.. பலரும் அறிந்திடாத உண்மைகள்.!

subiththira / 12 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு, மிமிக்ரி திறமை மற்றும் செண்டை மேளக் கலைஞராகவும் அறியப்பட்ட நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் இதயத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். 


ஆனால் இவர் சினிமாவைத் தாண்டி, விவசாயத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் விவசாயத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன.

ஜெயராம் விவசாயத்தில் தனது பயணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். ஆரம்பத்தில், 5 மாடுகளுடன் சிறிய பண்ணை ஆரம்பித்தார். இந்த முயற்சி பெரும்பாலும் அவரது தனிப்பட்ட ஆர்வத்தினால் இருந்தது. சினிமாவைத் தாண்டி கால்நடை வளர்ப்பு மீது காதல் கொண்டவர் என்பதற்கான சான்றாக இது பார்க்கப்பட்டது.


சிறிய முயற்சியுடன் துவங்கிய இந்த பண்ணை, கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து 8 ஏக்கர் நிலப்பரப்பில் 60க்கும் மேற்பட்ட பசுக்களை வளர்க்க கூடிய வகையில் மாறியது. இதன் மூலம் ஜெயராம் நடிப்பில் மட்டுமல்ல, பசு வளர்ப்பிலும் தனது திறமையைக் காட்டியுள்ளார்.

ஜெயராமின் இந்த முயற்சிக்கு கடந்த 2022ம் ஆண்டு, கேரள அரசு அவருக்கு “சிறந்த விவசாயி” என்ற விருது வழங்கியுள்ளது. இது அவரது ஆர்வத்திற்கும் , விவசாயத்தில் அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பிற்கும் கிடைத்த பரிசாகும். 

நடிகர் ஜெயராம் ஒரு சாதாரண நடிகராக இல்லாமல், விவசாயத்திலும் புது திறமைகளை வெளிப்படுத்தியவர். இந்நிலையில், பசுக்களை வளர்ப்பது, நிலத்தையும் பராமரிப்பது போன்ற செயல்கள் உண்மையான உழைப்பின் சிறந்த உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement