தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகரும், மனிதநேயத்தின் உருவகமாக போற்றப்பட்டவருமான கேப்டன் விஜயகாந்த், திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தனது மனிதநேயம் மற்றும் உதவித்தன்மையால் பலரின் இதயத்தில் அழியாத தடம் பதித்தவர்.

அவருடைய மனம் கனிந்த செயல்களைப் பற்றி பலரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் திரைத்துறையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சாந்தி வில்லியம்ஸ், விஜயகாந்த் அவர்களுடன் நடித்திருந்த ‘நரசிம்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து மிகுந்த உணர்ச்சி பொங்கியுள்ளார்.

சாந்தி வில்லியம்ஸ் அதன்போது," நரசிம்மா படத்தில எனக்கு ஒரு நாளைக்கு சம்பளம் 10 ஆயிரம். ரெண்டு நாள் தான் நடிச்சேன். ஆனா, மேனேஜர் எனக்கு 20000 -க்குப் பதிலாக ஒரு லட்ஷம் கொடுத்தார். என்ன அதிகமா தாறீங்க என்று கேட்டதற்கு கேப்டன் தான் உங்களுக்கு கொடுக்க சொன்னார் என்று அந்த மேனேஜர் சொன்னார்.
அப்ப கேப்டன் விஜயகாந்த் சாரும் காரில இருந்து பரவாயில்ல வைங்கன்னு சொன்னார். என் கணவர் உடம்பு சரியில்லாமல் இருந்தார். அவருக்கு உதவணும்னு தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார்னு அப்புறம் தான் தெரிஞ்சது." என்று கூறியிருந்தார்.
சாந்தி வில்லியம்ஸ் இவ்வாறு பகிர்ந்த இந்த அனுபவம், விஜயகாந்த் அவர்களின் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Listen News!