பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை மிருனாள் தாகூர், தனது அழகு, உழைப்பு மற்றும் திறமையால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நாயகியாக நடித்து மிகவும் பிரபலமாகியுள்ள அவர், ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையை மாற்றியமைத்த துயரமான அனுபவத்தை பகிர்ந்ததுடன், இன்று பெற்றிருக்கும் வெற்றியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்துள்ளார்.

மிருனாள் தாகூர் தனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்ததோடு, வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உறுதியையும் கொடுத்ததாக அவர் கூறினார்.
நடிகை அதன்போது, “என் சொந்தக்காரங்க கார்ல எங்க அம்மாவை ஏத்த மறுத்தாங்க. அன்னைக்கு நான் முடிவு பண்ணேன். சொந்தமா கார் வாங்கணும்னு... இன்னைக்கு நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கேன்.. எங்க குடும்பத்திலேயே பென்ஸ் கார் வைச்சிருக்கிறது நாங்க மட்டும் தான்." என்று கூறியிருந்தார். நடிகையின் இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!