சின்னத்திரையின் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ், ஒவ்வொரு சீசனும் ரசிகர்களை கவரும் அளவிற்கு சுவாரஸ்யமான தருணங்களைக் கொடுத்து வருகிறது. தற்போது நிகழும் பிக்பாஸ் சீசன் 9, தொடங்கிய முதல் நாட்களிலேயே பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி, ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு 47வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரோமோவில் நடிகர் மற்றும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கவின், வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். வீட்டுக்குள் வந்தவுடன், கவின் போட்டியாளர்களிடம் சென்று, “எப்புடி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கிறார்.

பின் “நான் ஜாலியா வந்திட்டு ஜாலியா போகணும் என்று தான் நினைச்சேன். ஆனா, பிக்பாஸ் எனக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பியிருக்கார்… அது வேறொன்றும் இல்ல” என்று சொல்லி எவிக்சன் நேம் போர்டை காட்டுகிறார்.
இதனைப் பார்த்த போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி கொள்கிறார்கள். இந்த தருணம் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக, எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Listen News!