சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 வது திரைப்படத்தை சுந்தர். சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளேயே அந்த படத்தில் இருந்து சுந்தர். சி விலகுவதாக அறிவித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுந்தர்.சி அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அது குஷ்புவின் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டது . இதற்கு பல கருத்துக்கள் வெளியான நிலையில், அதற்கும் தகுந்த பதிலடி கொடுத்திருந்தார் குஷ்பு.
இதற்கிடையில் நடிகை குஷ்பு, கமல்ஹாசன் சமீபத்தில் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. இதனால் கமல்ஹாசன் குஷ்புக்கு இடையே எந்த பிரச்சினை இல்லை என்பது தெரிய வந்தது.

ஏனென்றால் சுந்தர். சி ரஜினிகாந்த் கூட்டணி, திடீரென விலகியதால் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் அவர்கள் சகஜமாக பேசிக் கொண்டதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதற்காக அங்கு சென்றிருந்தார்.
அவருடன் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து குஷ்பு மற்றும் சுகாசினியும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
Listen News!