• Dec 17 2025

மீண்டும் திரையரங்கிற்கு களமிறங்கும் ‘அஞ்சான்’... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய முன்னணி படங்களில் ஒன்று ‘அஞ்சான்’. சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளை கவர்ந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மனதில் தனிப்பட்ட இடத்தைப் பிடித்தது. 


தற்பொழுது, இப்படத்தை Re-Edited வடிவில் திரையரங்கிற்கு கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது, அதற்கான டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது எனத் தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.

படக்குழுவின் தகவலின் படி, இந்த Re-Edited திரையிடல் புதிய காட்சிகள் மற்றும் மேம்பட்ட ஒளிப்படத் தரம் கொண்டதாக இருப்பதால், திரையரங்கில் புதிய அனுபவத்தை ரசிகர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

‘அஞ்சான்’ திரைப்படம் 2014ல் வெளியான போது, வசூலில் அமோக வெற்றி பெற்றிருந்தது. இப்போது 2025ஆம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி, படம் Re-Release ஆகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த Re-Release வாயிலாக, புதிய தலைமுறையினர் மற்றும் ரசிகர்கள் இருவரும் படத்தை திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement