இந்திய திரையுலகில் மிகுந்த காத்திருப்புக்கு பின், “காந்தாரா Chapter-1” இன்று (2025 அக்டோபர் 2) நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டுகளில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமாக ‘Chapter-1’ எனப் பெயரிட்ட இந்தப் படம், ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில், அவர் நடித்தும் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஹைலைட் கண்டிப்பாக ரிஷப் ஷெட்டியின் நடிப்பு. தெய்வீக சக்தி அவரில் கடக்கும் முக்கியமான காட்சிகள் ரசிகர்களை விழிக்கவைக்கும் அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது நடிப்பு மற்றும் சண்டைக்காட்சிகளில் காட்டும் அதிரடி இவை அனைத்தும் கதாபாத்திரத்தில் அவர் எவ்வளவு dedication-ஐ கொடுத்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு.
படத்தில் ஜெயராம் நடித்துள்ள ராஜசேகரன் எனும் அரசர் பாத்திரம், மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்டு, அழகாகவே நடித்துள்ளார். தனது மகனால் ராஜ்யம் அழிகிறது என்பதை உணரும் போது அவர் காட்டும் expressions ரசிகர்களை உருக்கும் வகையில் இருந்தது.
ருக்மிணி, சிறந்த பாடல்களில் வருகிறார் என்றாலும், அவரது நடிப்பு திறமை மிக மிக கவனிக்கத்தக்கது. அவருடைய கதாபாத்திரம் குறைந்த screen time-ல் கூட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் முதல் பாகத்தில் இருந்த யதார்த்த உணர்வு இந்த பாகத்தில் கொஞ்சம் குறைவாகவே இருந்ததாகக் கூறுகின்றனர். உணர்ச்சிப் பின்னணி மற்றும் கதை நகர்வின் இயல்பு கொஞ்சம் கற்பனை சார்ந்ததாக மாறிவிட்டது எனச் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஆனாலும், முழுமையான திரைப்பட அனுபவம், தொழில்நுட்ப நுணுக்கங்கள், மனதை பதைக்கும் நிகழ்வுகள் ஆகியவை படம் எதிர்பார்த்ததை விட மேலே சென்றுவிட்டது எனவும் கருத்துகள் எழுகின்றன.
Listen News!