பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் சரவணனைப் பார்த்து மாமா ஏன் இப்புடிப் பண்ணார் என்று கேட்க்கிறார். மேலும், அவர் பண்ணது துரோகம் என்கிறார் செந்தில். அதைக் கேட்ட சரவணன் மாமாவோட குணம் தான் தெரிஞ்சிட்டு எல்லோ பேசாம இப்புடியே விட்டிடலாம் என்கிறார். அதுமட்டுமல்லாமல், அப்பா ஏற்கனவே உன் மேல கோபமாக இருக்கிறார் நீ வேற ஏதும் பிரச்சனையை பண்ணி வைக்காத என்கிறார் சரவணன்.

அதனை அடுத்து ரெண்டு பேரும் பழனியோட கடையை போய் பார்ப்போம் என்கிறார். பின் கடைக்குப் போன செந்தில் பழனியோட பிரச்சனை பண்ணுறார். அதைப் பார்த்த குமார் செந்திலுக்கு அடிக்கப் போறார். இதனைத் தொடர்ந்து,செந்தில் பழனியைப் பார்த்து தாய் மாமா என்று பாசம் வைச்சதுக்கு நல்லது செய்துட்டீங்க என்கிறார்.
அப்புடியே எல்லாரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் பழனி செந்தில் கிட்ட உங்க அப்பா கடை நடத்தின ரோட்டில நானும் கடை நடத்த எனக்கு எந்தக் கூச்சமும் இல்ல என்று கோபமாக சொல்லுறார். மேலும் இதுதான் என்னுடைய திட்டம் என்கிறார் பழனி. அதுமட்டுமல்லாது, பழனி எனக்கு நீங்கள் யாருமே வேணாம் இங்கிருந்து கிளம்புங்க என்கிறார்.

அதைக் கேட்டு ரெண்டு பேரும் ஷாக் ஆகுறார்கள்.அதனைத் தொடர்ந்து கோமதி தன்ர அம்மாவைப் பார்த்து எல்லாத்துக்கும் காரணம் நீ தானே என்கிறார். அதைக் கேட்ட கோமதியோட அம்மா அழுது கொண்டிருக்கிறார். பின் மீனாவும் ராஜியோட அம்மாவை பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!