• Nov 22 2025

உண்மை தெரிந்து ரோகிணியின் கதையை முடித்த முத்து.? அம்மா வீட்டுக்கு கிளம்பிய மீனா

Aathira / 13 minutes ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  தனியாக இருந்து யோசித்துக் கொண்டிருக்கும் மீனா, இந்த உண்மை தெரிந்தால்  முத்து  உடனடியாக  எல்லாருக்கும் சொல்லுவார். இதனால் அண்ணாமலைக்கு ஹார்ட் அட்டாக் வரும், அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வர அவரை அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். இதனால் ரோகிணி உயிரிழக்கின்றார். 

அதன் பின்பு முத்துவை பொலிஸார் கைது செய்கின்றார்கள் என்று கற்பனை செய்கின்றார். எனவே நான் இந்த உண்மையை சொன்னால் இப்படித்தான் நடக்கும் என்று நம்புகின்றார். இதனால் முத்துவுடன் எப்படியாவது சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கின்றார்.  

அந்த நேரத்தில் அங்கு வந்த ரோகிணி, இன்னும் அதைப் பற்றி யோசித்து கொண்டு இருக்கிறீர்களா என்று கேட்க, உனக்கு என்ன நீ பேசாமல் இருப்பாய்.. ஆனால் இந்த  குடும்பத்தை ஏமாற்ற என்னால் முடியாது. நான் அம்மா வீட்டுக்கு கிளம்பி போவதாக சொல்ல, நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி. என்னுடைய உயிரும், க்ரிஷின்  உயிரும் உங்க கையில தான் இருக்கு என்று சொல்லுகின்றார். 


அதன்பின்பு  கார் செட்டில்  முருகன்  குடித்துவிட்டு இருக்க, அவருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புகின்றார் முத்து.  பின்பு அவர் குடித்த மீதியை குடிக்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற முத்து,  வித்யாவுடன் முருகன் பிரச்சனை என்றும், அதனால் முருகன் குடித்ததாகவும்  மீதமுள்ள  கொஞ்சத்தை தான் குடித்ததாகவும் உண்மையை சொல்லுகின்றார். இதை வைத்து பிரச்சனையை பண்ணிய மீனா வீட்டை விட்டு போவதற்கு முடிவெடுக்கின்றார். 

மேலும் இதை வைத்து மீனா சண்டை போட, நான் உண்மையாகவே குடித்துவிட்டு வருகிறேன் என்று முத்து சொல்லுகின்றார்.  அங்கு பிச்சைக்காரர் ஒருவரையும் வைத்து குடிக்கின்றார். அவர் எப்படி பிச்சைக்காரர்  ஆனார் என்று கேட்க, தனது மனைவியின் ஆடம்பரத்தால் தான் பிச்சைக்காரன் ஆனதாக அவர் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.








Advertisement

Advertisement