விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக இருந்து மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஒரு சில ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அமரன் திரைப்படத்தின் பின்னர் இவரது மவுஸ் அதிகரித்தது. தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
தற்போது சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " படத்திலும் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராசி " படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்போது அட்லி ,ஷங்கர் ,சுந்தர்சி போன்ற முன்னணி இயக்குநர்களுடன் படங்கள் செய்வதற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் 2018 பட இயக்குநர் யூட் ஆண்டனி இயக்கத்தில் சிம்புவை வைத்து படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தது பின்னர் சிம்புவிற்கும் வேல்ஸிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் படம் தற்பொழுது சிவகார்த்திகேயனுக்கு கைமாறியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
Listen News!