தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தன்னை நிரூபித்த ரேஸிங் திறமை கொண்ட ரேஸர் அஜித்குமார், தனது வாழ்க்கையின் இன்னொரு மறக்கமுடியாத சாதனையைப் பதிவு செய்துள்ளார். உலகப் புகழ்பெற்ற SRO Motorsport Group வழங்கும் “Gentleman Driver of the Year 2025” விருதை அவர் வென்று, இந்திய ரேஸிங் உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இத்தாலியின் வெனிஸில் பெரும் கோலாகலமாக நடைபெற்ற விருது விழாவில் அஜித் தமது குடும்பத்துடன் பங்கேற்று இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அஜித் விருது பெற்ற தருணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SRO Motorsport Group என்பது சர்வதேச ரேஸிங் போட்டிகளை நடத்தும் மிகப்பெரிய அமைப்பு. ஆண்டு தோறும் உலகளவில் பல போட்டிகளில் வீரர்கள் காட்டும் திறன், விளையாட்டு ஒழுக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான தேர்வில் அஜித் பல்வேறு சர்வதேச ரேஸர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் விருது பெற்ற தருணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!