சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் வாட்டர் மெலன் காட்சியை ரீல்ஸாக செய்து வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்தான் திவாகர். இவர் டாக்டராக காணப்பட்ட போதும் நடிப்பின் மூலமாகவே மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
தன்னைத் தானே நடிப்பு அரக்கர் என பெருமை பேசும் திவாகர், நாளடைவில் ஏனைய நடிகர்களை மட்டம் தட்டி பேச ஆரம்பித்தார். அதன்படி சூரி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் .
இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களோடு உள்ளே சென்ற திவாகருக்கு நாளடைவில் அமோக வரவேற்பு கிடைத்தது.
எனினும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் பிக் பாஸ் வீட்டிலும் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக கொண்டார். விஜய் சேதுபதி பலமுறை கூறியும் அதை காதில் வாங்கவில்லை.

மேலும் கேமரா முன்னாடி நின்று ரஜினிக்கு வயசாகிட்டு, விஜய் அரசியலுக்கு போயிட்டார், அஜித் ரேசுக்கு போயிட்டார், எனவே இந்த தமிழ் சினிமாவை காப்பாற்ற போவது நான் தான் என்று பேசினார்.
இறுதியாக கடந்த வாரம் திவாகரின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு வெறுப்பை கொடுத்தது. இதனால் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில், தன்னை சிங்கிள் என சொல்லித் தெரியும் திவாகரின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு 2018 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது. எனவே இதற்கு திவாகரன் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Listen News!