• Nov 22 2025

இளம் இயக்குநர் கென் கருணாஸின் புதிய முயற்சி.. இணையத்தைக் கலக்கிய Glimpse Video

subiththira / 48 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களில் குறிப்பிடத்தக்க பெயராக இருப்பவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸின் மகனாக அறிமுகமான கென், பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். 


தற்போது அவர் தனது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். முதன்முறையாக இயக்குநராக களம் இறங்கியதோடு, தனது சொந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு “காதலன்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தன. இத்திரைப்படத்தின் Glimpse Video இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதனுடன், படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது, படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவல்கள் வெளியாகிய சில நிமிடங்களில் #KenKarunas போன்ற ஹாஷ்டாக்குகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement