இன்றைய தொழில்நுட்ப காலத்தில் “சாத்தியமில்லாதது எதுவுமில்லை” என்ற நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக, Artificial Intelligence (ஏஐ) வளர்ச்சி இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், மக்கள் தங்களின் கற்பனைகளை நிஜத்தைப் போன்ற தரத்தில் உருவாக்கி ரசிக்கும் நிலை வந்துவிட்டது.

அதன் எடுத்துக்காட்டாக, தற்போது இணையத்தில் வைரலாகியிருப்பது கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தெருமுனை டீக்கடையில் டீ குடிப்பது போல உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்கள் தான்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்… இப்படி தமிழ் சினிமாவின் தலைமுறை கடந்த அனைத்து டாப் ஹீரோக்களும் ஒரே ஃப்ரேமில், சிரித்த படி, ஜாலியாக பேசிக்கொண்டும், ஒரு சாதாரண டீகடையில் டீ அருந்தும் காட்சிகளை ஏஐ நம்பமுடியாத வகையில் ரியலாக உருவாக்கியுள்ளது.

இதைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஏஐ படங்கள் தற்போது டுவிட்டர் , Instagram, Facebook ஆகிய அனைத்துத் தளங்களிலும் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகின்றன.

Listen News!