சிறகடிக்க ஆசை சீரியலில் தற்பொழுது ரோகிணி பற்றிய உண்மையை மீனா வீட்டில இருக்கிற ஆட்களுக்கு சொல்ல முடியாமல் தவிச்சுக் கொண்டிருக்கிற சீன் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இனி நிகழவிருக்கின்ற எபிசொட்டிற்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், மீனா ரோகிணி பற்றி யோசிச்சுக் கொண்டிருக்கிறார். பின், ஏதாவது ஒரு சண்டை போட்டாவது இங்கிருந்து போயிடனும் என்று நினைக்கிறார் மீனா. அந்த நேரம் பார்த்து முத்து அங்க வந்து நிற்க தன்ர கோபத்தை முத்து மேல காட்டுறார்.

அதைக் கேட்ட முத்து உனக்கு இஷ்டம் இருந்தால் இரு இல்லை என்றால் இங்கிருந்து கிளம்பு என்கிறார். பின் மீனா என்னால உங்களை ஏமாத்திக் கொண்டு இருக்க முடியல அதுதான் வீட்டை விட்டுக் கிளம்புறேன் என்கிறார். அதைப் பார்த்த அண்ணாமலை ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதுக்கு மீனா எதுவுமே கதைக்காமல் ரோகிணியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Listen News!