• Nov 23 2025

‘Tere Ishk Mein’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்... தனுஷ் சொன்ன சுவாரஸ்யமான தகவல்கள் வைரல்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், தனது நடிப்புத் திறன், கதாபாத்திரத் தேர்வு ஆகியவற்றால் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். தற்போது அவர் நடித்து வரும் மிகப்பெரிய பான்–இந்திய திரைப்படமான ‘Tere Ishk Mein’ குறித்து வெளிவந்த புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்த படத்தின் விழாவில், தனுஷ் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

‘Tere Ishk Mein’ நிகழ்வில் பேசிய தனுஷ், தன்னை இந்த படத்துக்கு ஏன் தேர்வு செய்தார்கள் என்ற தகவலைக் கூறியிருந்தார். அதாவது, “இயக்குநரிடம் நான் இப்படி ரோல்களுக்கு ஏன் என்னை அழைத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘உனக்கு ஒரு லவ் failure முகம் இருக்கு!’ என்று சொன்னார். அந்த மாதிரி பேசியதும் நின்று என் முகத்தையே ஆய்வு செய்தேன்! ஆனால் நிஜமாகவே ரொம்ப கடினமான ரோல்.” எனக் கூறியிருந்தார் தனுஷ். 


இந்த கருத்து நிகழ்வில் இருந்த ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். அத்துடன், ‘Tere Ishk Mein’ 2025 நவம்பர் 28 அன்று உலகளாவிய அளவில் வெளியிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement