விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னர் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தாலும், தற்பொழுது விஜய் சேதுபதி நடுவராக வந்து, நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியுள்ளார்.

மெதுவாக பேசுபவர், அமைதியாக விஷயங்களை புரியவைக்கும் நபர் என்று அந்த நடிகரின் ஸ்டைலை ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது அவர் காட்டிய அதிரடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில், நடுவர் விஜய் சேதுபதி மிகவும் கோபமாக திவ்யாவிடம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, “நான் கொடுத்த வேலையை செய்ய வக்கு இல்லை… உங்க கிட்ட பேச எனக்கு ஒன்றும் இல்லை!” எனக் கோபமாக கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த ஒரு வரி ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதனைக் கேட்ட திவ்யா எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கின்றார்.
Listen News!