தமிழ் சினிமாவின் பல்துறை திறமை மிக்க நட்சத்திரம் தனுஷ், இன்று தனது புதிய திரைப்படம் 'இட்லி கடை' மூலம் திரைக்கு வந்துள்ளார். இது ஒரு சாதாரண திரைப்பட வெளியீடல்ல. தனுஷ் நடித்தது மட்டுமல்லாமல், தாமாகவே இயக்கியுள்ள இப்படம், அவருடைய இயக்குநர் திறனுக்கு முக்கியமான திருப்புமுனை எனச் சொல்லலாம்.
இந்தப்படம், அதன் தலைப்பில் கூறுவது போல, ஒரு எளிமையான கிராமத்து கதையை மையமாகக் கொண்ட குடும்பத்தோடு பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நடிப்பு, சினிமா தொழில்நுட்பம், இசை என அனைத்திலும் ஒரு தரமான பாணி பின்பற்றப்பட்டுள்ளது.
'இட்லி கடை' என்பது சாதாரணக் கதையென தோன்றினாலும், அதற்குள் உணர்வுகள், மனித உறவுகள் மற்றும் சமூக பார்வைகள் கலந்த ஒரு அழுத்தமான திரைக்கதையாக அமைந்துள்ளது என ரசிகர்களின் First day பதில்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ், கிராமத்தில் ஒரு சின்ன இட்லி கடையை நடத்தும் இளைஞராக நடித்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் வரும் திருப்பங்கள், குடும்ப உறவுகளின் உயர்வும், வீழ்வும், மற்றும் சமூக சிக்கல்களின் மையத்தில் ஒரு சாதாரண மனிதனின் பார்வை என்ன? என்பதை இந்த படம் விவரிக்கிறது.
இதில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன என்பது திரையில் தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் படத்தின் இசையை அமைத்துள்ளவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது இசை மட்டும் இல்லாமல், படத்தின் பின்னணி இசையும் (BGM) ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இன்று படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் தங்களது கருத்துகளை பதிவிடத் தொடங்கியுள்ளனர். சில முக்கியமான பார்வைகள் இதோ..!
ரசிகர் ஒருவர், "தனுஷ் அண்ணா எப்பவுமே வேற லெவல். இப்போ direction-லயும் அசத்திட்டாரு. படம் எளிமையான கதையாக இருந்தாலும், அதை சொல்லும் நேர்த்தி நன்றாக இருந்தது.." எனப் பாராட்டியிருந்தார்.
இணையத்தில் வந்த மிக அதிகமான review-கள் படம் ஒரு நல்ல feel-good entertainer என்று கூறப்படுகின்றன. முதல் நாள் முதல் ஷோவில் இருந்து நல்ல பார்வையாளர்கள் திரண்டிருக்கின்றனர். குறிப்பாக மதியம் மற்றும் மாலை ஷோக்கள் திரையரங்குகள் full- ஆக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முக்கியமாக, குடும்ப ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வார இறுதி விடுமுறைகள் மற்றும் பொதுமக்கள் விமர்சனங்கள் அடிப்படையில், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பதிவு செய்யும் என்று திரையுலக வட்டாரங்கள் நம்புகின்றன.
Listen News!