சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை மீனாகிட்ட நல்ல குணம் இருக்கு அதோட அடுத்தவங்கள அனுசரிச்சுப் போற பழக்கம் இருக்கு இதெல்லாம் உன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் என்று வாழ்த்தினார். அதுக்கு மீனா உங்க ஆசிர்வாதம் இருக்கிற வரைக்கும் கண்டிப்பா நாங்கள் முன்னேறிக்கொண்டே இருப்போம் என்றார். பிறகு அண்ணாமலை எங்க ஆசிர்வாதம் கண்டிப்பா உங்களுக்கு இருக்கும் என்றார். அதற்கு ஸ்ருதி வாவ் வெல் செட் அங்கிள் என்கிறாள்.
இதனைப் பொறுக்காத விஜயா இப்ப எதுக்கு எல்லாரும் அலப்பற பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஓடர் தானே கிடைச்சது அதுக்கேன் இப்புடி எல்லாம் பில்டப் செய்யுறீங்கள் என்று கேக்கிறார். உடனே முத்து ஏன் முதல் தடவை செய்த மாதிரி ஏதாவது பிளான் பண்ணி அவள போகவிடாம செய்யப்போறீங்களோ என்று கேக்கிறான். விஜயா பிறகு கோபத்தில அண்ணாமலையோட கத்திக்கொண்டிருக்காள்.
பிறகு ரோகிணி ஸ்ருதியிடம் எனக்கு தெரிஞ்சு மீனா உங்கள விட நிறைய மணி ஏர்ன் பண்ணப்போறாங்கள் என்று சொல்லுறாள். அதுக்கு ஸ்ருதி உடனே அது நல்ல விஷயம் தானே என்கிறாள். அதைக் கேட்ட வுடனே ரோகிணியின் முகம் அப்புடியே மாறுது. பிறகு முத்து என்ன பார்லர் அம்மா கொழுத்திப் போட்டது அப்புடியே புஷ் என்று ஆச்சே என்கிறான்.
அதைத் தொடர்ந்து அண்ணி பெரிய ஓடர் கிடச்சிருக்கு ரீட் எல்லாம் எதுவும் இல்லயோ எனக் கேக்கிறான். அதுக்கு மீனா நீங்க போய்ட்டு வாங்க நான் எல்லாத்தயும் ரெடி பண்ணி வைக்கிறேன் என்றாள். பிறகு கிச்சினுக்கா மீனாவும் முத்துவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கினம். பின் விஜயா சிந்தாமணியுடன் மீனாவுக்கு கிடைச்ச ஓடர் பற்றிக் கதைக்கிறாள்.
அப்ப சிந்தாமணி இந்த ஓடர் தான் மீனாவுக்கு கடைசி என்று சொல்லுறாள். அதுக்கு விஜயா என்ன சொல்லுறீங்கள் அவள் நல்ல ஓடர் எடுக்கிறாள் உங்களுக்கு போட்டியா நீங்கள் சத்தம் போடாம இருக்கிறீங்கள் என்று கேக்கிறாள். பிறகு தான் விஜயாவுக்கு இதெல்லாம் சிந்தாமணியின் பிளான் என்று தெரியவந்தது. இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!