தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான கதை தேர்வாலும் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்திய நேர்காணலில் தனது கலை வாழ்வில் பெற்ற அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

நடிகை தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டதாவது, “எனக்கு ஹீரோயின் என்றால், இப்படித் தான் இருக்கணும் என்றே லேட்டாத் தான் புரிந்தது. ஹீரோயின் அழகாக இருக்கணும், மேக்- அப் போட்டு இருக்கணும் என்று ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. ஆனால், இந்த உண்மையை புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப நாள் ஆகிவிட்டது.” என்று கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்த வெளிப்பாடு, திரையுலகில் பலருக்கும் புதிய பார்வையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது ஆரம்ப காலத்தில், நடிப்பு என்பது, performance சிறப்பாக செய்தால் போதும் என்று தான் நினைத்தார். ஆனால், காலம் கடந்து தான் நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!