• Nov 23 2025

படக்குழு எதிர்பார்த்த வரவேற்பா.? வெளியானது கவினின் "மாஸ்க்" பட இரண்டாம் நாள் வசூல்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். "கிஸ்", "டாடா" போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்ட அவர், தற்பொழுது ‘மாஸ்க்’ (MASK) படத்தில் நடித்துள்ளார்.


அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கிய இந்த படத்தில், கவினுக்கு எதிரியாக வலிமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஆண்ட்ரியா. மேலும் சார்லி, பவன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

"கிஸ்" படத்தின் வெற்றிக்குப் பிறகு கவினின் அடுத்த படமான ‘மாஸ்க்’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே அதிகரித்து இருந்தது. டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே படம் ஒரு த்ரில்லராக இருக்கும் என்பதை உணர்த்தியது.

இந்த எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, படம் நவம்பர் 21, 2025 அன்று உலகளவில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே விமர்சகர்களிடமிருந்து mixed reviews வந்தன. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படம் இரண்டு நாட்களில் 3.8 கோடியினையே வசூலித்துள்ளது. இது கவினுக்கு கிடைத்த சுமாரான வரவேற்பு என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். 

Advertisement

Advertisement