• Feb 03 2026

“மாஸ்க்” படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்களேன்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மாஸ்க்” நேற்று (நவம்பர் 21, 2025) வெளியானது. இப்படத்தில் நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் ஆண்ட்ரியா தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க முயன்றுள்ளார்.


படத்தை அறிமுக இயக்குநர் விக்ரமன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிடிவ் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான விமர்சனம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதுவேறெதுவுமில்லை, ப்ளூ சட்டை மாறன் வழங்கிய விமர்சனம் தான்.

ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டதாவது, படத்தின் தொடக்கத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பல நூறு கோடிகளை மாஸ்க் போட்ட கும்பல் கடத்திக் கொண்டு செல்கிறது. இதன் பின்னணி கதையின் அடிப்படையாக அமைகிறது.

ஆண்ட்ரியா சமூக சேவை செய்பவராக காட்டப்படுகிறார். கதாநாயகன் கவின், தனியார் துப்பறிவாளராக நடித்துள்ளார். இவர்களுக்கு கும்பல் கடத்திச் சென்ற பணத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதுதான் கதை. 


இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன், வில்லன் கதாபாத்திரம் மிகவும் வீக்காக இருக்கிறது. வில்லன், குழந்தையை கடத்தி பிளாக்மெயில் செய்ய துரத்துகிறார். இந்த திருப்பம் படத்தில் முக்கியமான மற்றும் பரபரப்பான தருணமாக அமைந்துள்ளது.

மாறன் மேலும் கூறியதாவது, சார்லி என்கிற கதாபாத்திரம் முக்கியத்துவம் குறைவாக இருந்தது. “சார்லிக்கு உப்புச்சப்பில்லாத கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். 

அத்துடன், “படத்தை தியேட்டரில் பார்க்கலாம். ஆனால் பெரும்பாலான காட்சிகள் ஆடியோவில் ஓடிக் கொண்டே கதையை நடத்துகின்றன. வாய்ஸ் ஓவரில் கதையை ஓட்டுவதால், அது ஓர் ஒலிச்சித்திர அனுபவமாக மாறியுள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement