தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான ‘LIK’ குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தின் 2வது பாடல் ‘பட்டுமா’ வருகிற 27ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாடல் ரிலீஸ் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
‘LIK’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சீமானின் பங்களிப்பு காணப்படுவதால் சமூக சிந்தனை மற்றும் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாது, இப்படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகள் முக்கிய கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன. ‘பட்டுமா’ பாடல் ரிலீஸ், சமூக வலைத்தளங்களில் அதிக ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!