தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தற்போது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒரு கட்டத்தில் உள்ளார். நடிகர் விஜய் சமீபத்தில் தனது “ஜனநாயகன்” திரைப்படத்துக்கான ரிலீஸ் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

படக்குழுவின் அறிவிப்பின் படி, ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் திரைப்படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஆண்ட்ரியாவின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

அந்த பேட்டியில் ஆண்ட்ரியா குறிப்பிட்டதாவது, “விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. என்னைக் கேட்டால், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
ஆண்ட்ரியா மேலும், “நான் அவருடன் மாஸ்டர் படத்தில் நடித்தேன். அவர் ஒரு பெரிய ஸ்டார் என்றாலும் ஒருநாளும் படப்பிடிப்புத் தளத்தில் பெருமிதமாக நடந்து கொண்டதல்ல. அவர் எப்போதும் எளிமையாகவும், அனைவரும் அணுகக் கூடியவாறும் இருப்பார்.” என்றார்.
ஆண்ட்ரியா மேலும் கூறியதாவது, “கூகுள் கூகுள்” பாடலை அவருடன் பாடிய அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது." என்றார். அத்துடன், படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் ஆண்ட்ரியாவிடம் அரசியலில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டார். ஆண்ட்ரியா அதற்கு, “இல்லை, நான் அரசியலில் சேரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அரசியலில் வருவார் என்று அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
அத்துடன், நேர்காணலின் போது விஜய் தனது அரசியல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆண்ட்ரியா “ஐய்யய்யோ… நான் போக மாட்டேன். அதை நான் மாஸ்டர் படப்பிடிப்பிலேயே சொல்லிவிட்டேன்.” என்று கூறியிருந்தார்.
Listen News!