• Jan 18 2025

மீண்டும் இணையும் மெர்சல் டீம்! இயக்குனர் முதல் ஹீரோயின் வரை! தீயாய் பரவும் திடீர் செய்தி-Thalapathy 69

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்களின் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருக்கின்றார். இப்படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருந்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு விடையாக சூப்பரான குட் நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.


விஜய் அரசியல் கட்சி துவங்கியதால் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும் நடிப்பில் இருந்து முழுமையாக விலகுவதாக விஜய் அறிவித்தது ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


இந்த சோகம் ஒருபக்கம் இருந்தாலும் தளபதி 69 திரைப்படத்தை யார் இயக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் மறுபக்கம் இருந்து வருகின்றது. தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 அறிவிப்பை வெளியிட இருக்கின்றார். ஆனால் அதற்குள் தளபதி 69 இயக்குனர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.


கார்த்திக் சுப்புராஜ் முதல் ஆர்.ஜெ பாலாஜி வரை பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இவ்வாறு பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தான் இயக்கவுள்ளதாக தெரிகின்றது.


விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லி மீண்டும் விஜய்யுடன் இணையப்போகின்றார் என கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. அட்லி கூட மீண்டும் விஜய்யுடன் இணைவதை போலவே பேட்டிகளில் பேசி வந்தார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அட்லி ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.


அதன்படி தற்போது விஜய்யின் தளபதி 69 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சமந்தா இப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

Advertisement

Advertisement