கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் யாஷ், ‘KGF’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடித்து வரும் புதிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ தற்போது இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. யாஷின் இந்த படம், கன்னட மொழியை தாண்டி பான் இந்தியா அளவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தை, இயக்குநர் கீதா மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இதுவரை வெளியான தகவல்களின்படி, இந்த படம் ஒரு ஆக்ஷன் – திரில்லர் கதைக்களத்தில், வலுவான சமூக பின்னணியுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் யாஷுடன் இணைந்து, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழி ரசிகர்களை கவரும் வகையில், நடிகர் தேர்வும் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் மார்ச் 19-ம் தேதி உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனே, யாஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை ‘டாக்ஸிக்’ படத்தில் இடம்பெறும் கதாநாயகிகளின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது படக்குழு இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யாஷ் ஏற்கும் கதாபாத்திரத்தின் பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அறிவிப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
Listen News!