தமிழ் திரையுலகில் இப்போது ‘பராசக்தி’ என்ற புதிய திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது திரை ரசிகர்களுக்கான காத்திருப்பு படம் என்றும் சொல்லலாம். இப்படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள் சிவகார்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா முதன் முறையாக கைகோர்த்து நடிக்கின்றனர். இதன் மூலம் திரையுலகில் இந்த மூவரின் கூட்டணி புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான அனுபவத்தால் பரிச்சயமானவர். அவரது கதை மற்றும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தும் திறன், ‘பராசக்தி’ படத்தையும் தனித்துவமான படைப்பாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராசக்தி படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீலீலாவின் அறிமுகம், படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ்.
பராசக்தி படத்தை வரும் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், ரூ. 1.26 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் ரசிகர்களின் ஆர்வம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
Listen News!