சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் தான் பராசக்தி. இந்த படம் எதிர்வரும் பத்தாம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனை சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.
மேலும் சமீபத்தில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்பீச்சும் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.
இந்த நிலையில், பராசக்தி படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கும் ரவி மோகன், சிவகார்த்திகேயனை பாராட்டி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி அதில் அவர் கூறுகையில், இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக பராசக்தி இருக்கும் .

பொதுவா நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் ஆடியோ லாஞ்சில் பேசுவதற்கு கூச்சமா இருக்கும். ஆனா இப்போ சிவகார்த்திகேயன் பத்தி ரொம்ப சந்தோஷமா பேசுவேன். ஏன்னா இந்த படத்தை பற்றி கண்டிப்பா சொல்லியே ஆக வேண்டும். இந்த படத்தில் நானும் ஒருவராக நடித்துள்ளேன் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. இது சாதாரணமாக பண்ணக்கூடிய படம் கிடையாது.
பல பேரின் கடினமான உழைப்பில் உருவான தங்கம் பராசக்தி. இந்த படத்தில் எஸ்.கே எவ்வளவு உழைத்து இருக்கிறார் என்று நாங்கள் எல்லாருமே பார்த்தோம். அவர் அடிப்படையில் இருந்து வளர்ந்து வந்தவர். எனவே அவர் கூட எல்லோரும் ஒட்டிக்கிட்டு இருங்க. அவர் மேலும் மேலும் வளரனும் என்று கூறியுள்ளார்.
Listen News!