பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் குடும்பத்தை ஹார்ட்டில பார்த்த அரசி எங்கட குடும்பத்தை இப்புடி கஷ்டப்படுத்துறாங்க அவங்களை சும்மா விடக் கூடாது என்கிறார். அதைக் கேட்ட மீனா இருக்கிற பிரச்சனை போதாதா என்று கேட்கிறார். மறுபக்கம் மயில் மீனா கூட கொஞ்சநேரம் பேசிட்டு வரவா என்று பாக்கியத்தைக் கேட்கிறார். அதுக்கு பாக்கியம் அமைதியா இருக்கச் சொல்லுறார்.
அதனை அடுத்து மயில் பழனியை பார்த்து சித்தப்பா என்று கூப்பிட அதைக் கேட்ட பழனி யாருக்கு யாரு சித்தப்பா என்று கோபமாக கேட்கிறார். மேலும் உனக்கு எங்க அக்கா என்ன குறை வைச்சாங்க என்கிறார். அதனைத் தொடர்ந்து சரவணன் எப்புடி ஒரு தங்கமான புள்ள அவன் மேல எப்படி நீ கம்பிளைன்ட் கொடுத்த என்று கோபப்படுறார்.

அதைக் கேட்ட பாக்கியம் நீ ஏன் ஓவரா பேசுற என்று கேட்கிறார். அதுக்கு பழனி ஒரு மனசாட்சி இல்லாம அந்தக் குடும்பத்தை ஜெயிலில வைச்சிருக்க என்கிறார். பின் ராஜி பழனியை அங்கிருந்து கூட்டிக் கொண்டு போறார். அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஆட்களை பொலிஸ் ஹோர்ட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து நிற்கிறார்கள்.
பின் பாக்கியம் சக்திவேல் கிட்ட போய் நீங்க இங்க என்ன பண்ணுறீங்க என்று கேட்கிறார். மேலும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மாதிரி நம்ம சம்மந்திக்கு நீங்க ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கணும் என்கிறார் மயில் அப்பா. அதுக்கு சக்திவேல் அமைதியாவே இருக்கிறார். பின் மயில் ஜட்ஜ் கிட்ட என்ர புருஷனுக்கு என்னை பிடிக்கல என்று சொல்லி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!