விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஃபினாலேக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, சமீபத்தில் நிகழ்ந்த Ticket to Finale டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மன அழுத்தத்தையும், பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற கார் டாஸ்க் (Car Task) தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த டாஸ்க், பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட டாஸ்க்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Ticket to Finale டாஸ்க்கின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கார் டாஸ்க்கில், போட்டியாளர் சாண்ட்ரா காருக்குள் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில், மற்ற போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன், சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியேற்றினார்கள்.
இந்த காட்சிகள் நேரலை ஒளிபரப்பில் இடம்பெற்றதுடன், பின்னர் டிவி ஒளிபரப்பிலும் காட்டப்பட்டது. சாண்ட்ராவை தள்ளிய காட்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது சாண்ட்ராவின் கணவர் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது பேச்சு, ரசிகர்களின் மனதை மேலும் கவர்ந்துள்ளது.
அவர் அதன்போது, " என்னோட ஒரு குழந்தைக்கு பார்வதியை பிடிக்கும். போன்ல ஷோர்ட்ஸ் பார்த்திட்டு இருக்கும் போது பார்வதி, சாண்ட்ராவை தள்ளிவிட்டதை பார்த்திட்டாங்க. அதைப் பார்த்திட்டு ஏன் அம்மாவை பார்வதி கிக் பண்ணாங்க. பார்வதி ஆண்டி பேட்ல அச்சான்னு சொன்னாங்க. இன்னொரு குழந்தை அழுதிட்டாங்க." என்று கூறியுள்ளார்.
சாண்ட்ராவின் கணவர் கூறிய சம்பவம், வெறும் ஒரு ரியாலிட்டி ஷோ சர்ச்சை அல்ல; அது குடும்பத்தையும், குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.
Listen News!