விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது இறுதி கட்டத்திற்கு அருகில் உள்ளது. ஃபினாலேக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் நிகழ்ச்சியில் நடைபெற்ற “கார் டாஸ்க்” (Car Task) தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த டாஸ்க் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட டாஸ்க்குகளில் ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி வட்டாரங்களில் இது தொடர்புடைய விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதனால் விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் வழங்கி வெளியேற்றிய சம்பவம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்த சர்ச்சை சம்பவத்தைப் பற்றி, பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அதன்போது, “பார்வதியும், கம்ருதீனும் செய்தது அடிப்படை மனிதாபிமானம் இல்லாத ஒரு இழிச்செயல். இரு குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணை, கம்ருதீன் வாடி போடி என்று கொஞ்சம் கூட பண்பில்லாமல் ரொம்ப நேரம் திட்டி அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தது தவறின் உச்சம்.
அவர்கள் வெளியில் அனுப்பப்பட்டது கூட இதற்கு போதாது. வெளியேறும் முன் சாண்ட்ரா காலில விழுந்து மக்களை கொஞ்சம் சமாதானப்படுத்த முயன்றான் கம்ருதீன். கோபத்தின் உச்சியில் ஏதோ பேசிவிட்டு வருந்துவது மனித இயல்பு. ஆனால், இவர்கள் இருவரும் தொடர்ந்து பல மணி நேரம் அந்தப் பெண்ணை வன் சொற்களால் நிந்தித்தது பார்க்கிற நமக்கே தாங்க முடியாத ஒன்றாக இருந்தது.” என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தனின் கருத்து, இந்த சம்பவத்தின் மனிதாபிமானத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருந்தது. அவர் இவ்வாறு தெரிவித்ததால், சமூக வலைத்தளங்களில் மக்கள் மீண்டும் கோபத்தில் உள்ளனர்.
Listen News!