பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் ஜட்ஜ் கிட்ட என்ர பொண்ணை நல்ல படியா பார்த்துப்பேன் என்று சொன்னதால தான் இவங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்... ஆனா, அங்க இவளுக்கு கொடுமை தான் நடக்குது என்று சொல்லி அழுகிறார். மேலும், வேணும் என்றே என்ர பொண்ணை துரத்திவிட்டுடாங்க.. மாப்பிள்ளையும் பொண்ணும் தனி குடுத்தனத்தில சந்தோசமா வாழணும் என்கிறார்.
அதைக் கேட்ட மீனா சேர்ந்து வாழவே வாய்ப்பில்ல இதுக்க இவங்க வேற இப்படி பேசுறாங்க என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் நாங்க அந்தப் பொண்ணுக்கு எந்த துரோகமும் பண்ணல என்கிறார். மேலும், இவங்க சொல்லுற மாதிரி எதுவும் நடக்கல என்கிறார். பின் சரவணன் ஜட்ஜ் கிட்ட வீட்டை விட்டு அனுப்பினது உண்மை தான் ஆனா அவள் சொன்ன குற்றச்சாட்டு முழுக்க பொய் என்கிறார்.

மேலும், படிப்பு, வேலை எல்லா விசயத்திலயும் பொய் தான் சொன்னவள் என்கிறார். அதனை அடுத்து சரவணன் என்னால அவள் கூட சேர்ந்து எல்லாம் வாழ முடியாது என்று சொன்னதும் மயில் ஷாக்காகி அழுகிறார். பின், மாமா இப்படி எல்லாம் பேசாதீங்க என்கிறார் மயில். இதைத் தொடர்ந்து முத்துவேல் ஜட்ஜ் கிட்ட பாண்டியன் குடும்பம் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட பாக்கியம் அதிர்ச்சி ஆகிறார். சக்திவேலும் அவங்க சொல்லுற மாதிரி எதுவும் நடக்கல என்கிறார். பின் எல்லாருக்கும் ஜாமீன் கிடைச்சிருச்சு என்கிறார் பழனி. அதைக் கேட்டு எல்லாரும் சந்தோசப்படுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!