சினிமாத் துறையில் தனித்துவமான இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளராக பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் கே. பாக்யராஜ். எளிய மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய கதைகளை திரையில் உயிர்ப்பித்தவர் என்ற பெருமை அவருக்கே உரியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், திரைத்துறையில் தனது 50வது ஆண்டை நிறைவு செய்ததையும், தனது பிறந்தநாளையும் முன்னிட்டு கே.பாக்யராஜ் பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பு திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடமும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பாக்யராஜ், தனது திரையுலக பயணத்தை நினைவுகூர்ந்தபோது, “10-20 வருடம் தான் என நினைத்தேன். ஆனால் 50 வருடங்களை கடந்துள்ளதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்போது வரை தொடர்ந்து நடிக்கிறேன். இந்த ஆண்டு படமும், வெப்சீரிஸும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. இந்த வருடத்தில் இருந்து மீண்டும் ஒரு உத்வேகத்தோடு படங்கள் செய்யலாம் என இருக்கிறேன்.”என்று கூறியிருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் பல மூத்த கலைஞர்கள் ஓய்வெடுக்கும் நிலையில், கே.பாக்யராஜ் இன்னும் தொடர்ந்து நடிப்பிலும், படைப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், அவர் கூறிய கருத்துகள் ரசிகர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
Listen News!