தமிழ் திரையுலகிலும், அரசியல் உலகிலும் தனித்துவமான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் இன்னமும் ஒரு வழிகாட்டியாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் பயணத்தை விஜயகாந்தின் கோவிலில் தொடங்கி, தனது முதல் சம்பளத்தை அவரது காலடியில் வைத்து வணங்கியுள்ளார் பிரபல நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“இந்த வருடத்தோட முதல் பயணம் விஜயகாந்தின் கோவிலில் தான் ஆரம்பித்து உள்ளது. அவரோட பெரிய மாநாட்டில நடைபெற இருக்கும் பட்டி மன்றத்தில நான் பேசப்போறேன். அவருடைய வாழ்த்துக்களுடன் இந்த வருடத்தை துவங்கி இருக்கிறேன்.” என்று உணர்ச்சி பொங்க இந்திரஜா தெரிவித்துள்ள கருத்துகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
புதிய வருடத்தின் தொடக்கத்தில், வாழ்க்கையின் முதல் வருமானத்தை ஒரு முன்மாதிரி மனிதருக்கு அர்ப்பணிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில், தனது இந்த வருடத்தில் பெற்ற முதல் சம்பளத்தை கேப்டன் விஜயகாந்தின் காலடியில் வைத்து வணங்கிய இந்திரஜாவின் செயல், ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.
Listen News!