பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டவர் தான் சுபிக்ஷா. இவர் மீனவ பொண்ணு என்பதால் பலராலும் ரசிக்கப்பட்டார். மேலும் இறுதி வரை இவருக்கு மக்களுடைய ஆதரவு அமோகமாக காணப்பட்டது. ஆனாலும் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தார்.
இந்த நிலையில், சுபிக்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது. அதன்படி அதில் அவர் கூறுகையில், தான் முதலாவதாக வெளியில் சென்று நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும். இத்தனை நாட்களாக உள்ளே அடைந்து கிடந்தது போல இருக்கிறது.
பின்பு நான் என்னுடைய நண்பியின் வீட்டுக்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு லோங் ட்ரைவ் போக வேண்டும் அதற்கு பின்பு அம்மா அப்பாவை பார்க்க வேண்டும். கடலுக்கு செல்ல வேண்டும். மீன்களை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அத்துடன் தான் ஆரம்பத்தில் கொஞ்சம் எமோஷனலாக இருந்ததாகவும் இதனால் பிரஷர் அதிகமாகி ஒரு சில டாஸ்க்கில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதற்கு பிறகு ஜாலியா இருந்ததாகவும் தெரிவித்தார். உள்ளே நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சுபிக்ஷாவிடம் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்க, தான் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை விக்ரமைதான் நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அவர் இறுதியாக இடம்பெற்ற சம்பவத்தில் டல்லாகி விட்டதாகவும், ஆனால் இப்பொழுது அரோரா தான் டைட்டில் வின் பண்ணுவார் என்று விக்ரமுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
Listen News!