இந்திய இசை உலகின் மைல்கல் மனிதர், ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்க்கை, படைப்புகள் மற்றும் தனிப்பட்ட நெறிமுறைகள் குறித்து ஒரு உணர்ச்சி வாய்ந்த உரையாடலை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அவருக்கு இசை ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆனால் அந்தப் பிரபலத்திற்கும் வெளிப்புறத்தின் பின்னால் ஒரு தனிமை நிரந்தரமாக உள்ளது என்பதனை அவர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, “சினிமா துறையில நண்பர்கள் என்று யாரும் இல்ல, என் தனிமை தான் எனக்கு நண்பன். என் நண்பர்கள் என்றால் என் கூட வேலை செய்யும் நபர்கள் தான். என் டிரைவர்கள் தான் என் நண்பர்கள். என்கூட வேலை செய்யுறவங்கள எவ்வளவோ நாள் இங்கேயே இருப்பிங்க அடுத்த கட்டத்துக்கு போன்னு சொல்லி இருக்கேன்.
கேமராமானை எப்போ நீ டைரக்சன் பண்ணப் போறேன்னு கேட்டு இருக்கன். எனக்கு என்கூட இருக்கிற எல்லாரும் முன்னுக்கு வரணும். அவங்க அடுத்த கட்டத்துக்கு போகணும்னு தான் ஆசை.” என்று அவர் கூறி தன் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கருத்து, அவரது வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை பிரதிபலிக்கிறது.
Listen News!