விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. ஒவ்வொரு வாரமும் நடைபெறும் வெளியேற்றங்கள், டாஸ்க் சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களின் தனிப்பட்ட உறவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய அமித், தற்போது வழங்கியுள்ள ஒரு பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் பார்வதி பற்றி அவர் கூறிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “கம்ருதீனுக்கு தான் பார்வதியை லவ் பண்ணுறேன் என்று சொல்லத் தெரியல. அதே மாதிரி பார்வதிக்கும் கம்ருதீனை லவ் பண்ணுறேன் என்று சொல்லத் தெரியல. ஏன் என்றால் ரெண்டு பேருக்கும் அந்த கமிட்மெண்ட் பண்ண பிடிக்கல. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா மக்களிடமிருந்து Vote வரும் என்று தெரியும். இதனால அவங்க அந்த benefits-ஐ மட்டும் எடுத்துக்கொண்டாங்க..." என்று கூறியிருந்தார்.
அமித்தின் இந்த பேட்டி வெளியான உடனே, Twitter, Instagram, YouTube போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
Listen News!