தமிழ்த் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலக அளவில் காணப்படுகின்றனர். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, கில்லி, கத்தி, துப்பாக்கி என பல படங்கள் வெற்றிகளை கொடுத்து இருந்தாலும் இவருக்கான அடையாளத்தை கொடுத்த படம் பூவே உனக்காக..
இந்தப் படம் தான் விஜய்க்கு முதன் முதலில் பிளாக் பாஸ்டர் வெற்றியை கொடுத்ததும், பட்டித் தொட்டி எங்கும் அறிமுகம் செய்த படமாக காணப்படுகிறது. விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்த படம் விஜயை ஒரு குடும்ப நாயகனாக காட்டியது.
விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் தான் உன்னை நினைத்து. காதல் படமான இந்த படத்தில் முதல் முதலில் ஒப்பந்தமானவர் விஜய். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தொடர்பாக விஜய்க்கும் விக்ரமனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த படம் இடையில் கைவிட்டதாகவும் அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் பணியாற்றவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் ஜனநாயகன் படத்திற்கு பிறகு திரையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இயக்குநர் விக்ரமன் தன்னுடைய உன்னை நினைத்து படத்தில் விஜய் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். அவரை வைத்து இரண்டு பாடல்கள் படமாக்கினோம் என்று கூறி அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அதன்படி உன்னை நினைத்து படத்தில் என்னை தாலாட்டும் பொன் ஊஞ்சல் பாடலில் விஜயும் லைலாவும் இணைந்து நடித்த பாடல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படத்தை விஜய் பாதியில் கைவிட்டு இருந்தாலும் அதில் நடித்த சூர்யாவுக்கு இது வெற்றி படமாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!